சென்னை:-திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் ‘அட்டக்கத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘வில்லா-2’, ‘தெகிடி’ ஆகிய வெற்றிப் படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவருடைய தயாரிப்பில் ‘முண்டாசு பட்டி’, ‘லூசியா’ உள்ளிட்ட சில படங்கள் வெளிவர உள்ளன.
தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற சி.வி.குமார் தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார்.இவர் இயக்கும் புதிய படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி