செய்திகள் அமெரிக்க அதிபரின் மனைவியிடம் தனது தந்தைக்கு வேலை கேட்ட சிறுமி!…

அமெரிக்க அதிபரின் மனைவியிடம் தனது தந்தைக்கு வேலை கேட்ட சிறுமி!…

அமெரிக்க அதிபரின் மனைவியிடம் தனது தந்தைக்கு வேலை கேட்ட சிறுமி!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா வெள்ளை மாளிகையில் மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். மாணவிகளுடன் அவர் கலகலப்பாக பேசிக்கொண்டிருந்தபொது,

ஷேர்லோட்டி பெல் என்ற 10 வயது சிறுமி, திடீரென மிச்செலி, ஒபாமாவின் அருகில் வந்து,”தன்னுடைய தந்தை மூன்று வருடங்களாக வேலையின்றி தவிப்பதாகவும், அவருக்காக நீங்கள் உதவி செய்யுங்கள் என்று கூறி தனது தந்தையின் பயோடேட்டாவை மிச்செல் ஒபாமாவிடம் கொடுத்தார்.

ஒரு நிமிடம் அதிர்ச்சி அடைந்த மிச்செல், அந்த பயோடேட்டாவை வாங்கி கண்டிப்பாக அந்த சிறுமியின் தந்தைக்கு வேலைக்கு ஏற்பாடு செய்வதாக கூறி, அந்த சிறுமியை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறினார். இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தால் அந்த இடமே சிறிது நேரம் மவுனமாக காணப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மிச்செலி, தன்னுடைய தனிப்பட்ட முயற்சியால் சிறுமியின் தந்தைக்கு வேலை கிடைக்க முயற்சி செய்வேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி