சென்னை:-விஜய் இயக்கிய தெய்வத்திருமகள், தலைவா படங்களில் அமலாபால் நாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டனர். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளார்கள்.
ஜூன் 7ம் தேதி கொச்சியில் இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது.சென்னையில் 12ம் தேதி திருமணம் நடக்கிறது.திருமணத்துக்கு முன் படங்களை முடித்து கொடுத்து விட அமலாபால் அவசரம் காட்டுகிறார்.
இவர் தற்போது தனுஷ் ஜோடியாக வேலை இல்லா பட்டதாரி படத்தில் நடிக்கிறார். பார்த்திபன் இயக்கும் கதை, திரைக்கதை, வசனம் இயக்கும் படத்தில் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். மேலும் தெலுங்கு, மலையாளம் படங்கள் கைவசம் உள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி