செய்திகள் அணு ஆயுதம் வைத்திருக்கும் இந்தியா,அமெரிக்கா உள்பட 9 நாடுகள் மீது வழக்கு!…

அணு ஆயுதம் வைத்திருக்கும் இந்தியா,அமெரிக்கா உள்பட 9 நாடுகள் மீது வழக்கு!…

அணு ஆயுதம் வைத்திருக்கும் இந்தியா,அமெரிக்கா உள்பட 9 நாடுகள் மீது வழக்கு!… post thumbnail image
வாஷிங்டன்:-அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் மார்ஷல் தீவுகள் என்ற குட்டி நாடு உள்ளது. இது பசிபிக் கடல் பிராந்தியத்தில் உள்ளது. இங்கு கடந்த 1946 மற்றும் 1958ம் ஆண்டுகளில் அமெரிக்கா அணு குண்டு வெடித்து சோதனைகள் நடத்தியுள்ளது.

67 தடவைகள் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதனால் அங்கு சுற்றுப்புற சூழலும், மக்களின் உடல் நலமும் பாதிக்கப்பட்டுள்ளது. கதிர்வீச்சு பாதிப்பு இன்னும் இருந்து வருகிறது.அணு ஆயுதம் குறித்த சர்வதேச சட்டத்தை மதிக்கவில்லை என அமெரிக்கா மீது மார்ஷல் தீவுகள் நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு அமெரிக்காவின் சான்பிரான் சிஸ்கோ கோர்ட்டில் தொடரப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அணு ஆயுதங்களை வைத்திருக்கும் அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இஸ்ரேல் மற்றும் வடகொரியா உள்ளிட்ட 9 நாடுகள் மீது நெதர்லாந்து தலைநகர் ஹகூவில் உள்ள சர்வதேச கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி