லண்டன்:-இங்கிலாந்து நாட்டு அரசு பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட வேண்டும் என்று சமீபத்தில் உத்தரவிட்டது. இதனையடுத்து அங்குள்ள பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
ஆனால் இம்முறைக்கு அந்நாட்டு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி சுமார் 7500 ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், “எங்களது தனிப்பட்ட தொழில் உரிமையை பறிப்பதாகவும், மீறுவதாகவும் இத்திட்டம் அமைந்துள்ளது.
எனவே இத்திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நாள் முழுவதும் கேமரா வைத்து கண்காணிக்க நாங்கள் என்ன சோதனை கூடத்து எலிகளா. என்று கேள்வியெழுப்பினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி