மிஸ்ரா வீசிய 7-வது ஓவரின் 3-வது பந்தில் சிக்ஸ் அடித்த சேவாக் அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார். அவர் 22 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் 30 ரன் எடுத்தார். அடுத்து கடந்த இரண்டு போட்டிகளிலும் அசத்திய மேக்ஸ்வெல் களம் இறங்கினார்.கம்ரான் சர்மா வீசிய 10 ஓவரின் 3 பந்தில் இமாலய சிக்ஸர் அடித்து மேக்ஸ்வெல் தனது அதிரடியை தொடங்கினார். அடுத்த பந்தில் அல்வா மாதிரி கையில் கொடுத்த கேட்சை வார்னர் பிடிக்க தவறினார். 11-வது ஓவரின் கடைசி பந்தில் புஜாரா 32 பந்தில் 6 பவுண்டரியுடன் 35 ரன் எடுத்து சமி பந்தில் வெளியேறினார்.பதான் வீசிய 12வது ஓவரில் மேக்ஸ்வெல் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்த ஓவரை மிஸ்ரா வீசினார். இந்த ஓவரில் 4 இமாலய சிக்சர் விளாசினார் மேக்ஸ்வெல். அதோடு ஐதராபாத் பந்து வீச்சாளரின் பந்துகளை விட்டு வைக்கவில்லை.சர்மா வீசிய அடுத்த ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி விளாசினார். இதற்கிடையே 10 ரன் எடுத்த மில்லர் அவுட் ஆனார். மறுமுனையில் யார் அவுட்டானாலும் நமக்கென்ன என மேக்ஸ்வேல் தன் அதிரடியை நிறுத்தவி்ல்லை.
18-வது ஓவரில் 2 சிக்சர் அடித்த அவர் அடுத்த பந்தில் அவுட் ஆனார். மேக்ஸ்வெல் 43 பந்தில் 5 பவுண்டரி, 9 சிக்ஸருடன் 95 ரன் குவித்தார். அடுத்து வந்த வீரர்கள் தங்கள் பங்குக்கு ரன் அடிக்க டெல்லி 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன் குவித்தது. ஐதராபாத் அணி சார்பில் புவனேஸ்குமார் 3 விக்கெட் வீழ்த்தினார்.பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் களம் இறங்கினர். தொடக்கம் முதலே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஜான்சன் பந்தில் தவான் 1 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த வார்னர் 9 ரன்னில் பாலாஜி பந்தில் ஆட்டம் இழந்தார்.அதன்பின் வந்த வீரர்கள் சரியாக விளையாடாததால் ஐதராபாத் 121 ரன்னில் சுருண்டது. இதனால் பஞ்சாப் அணி 72 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பில் பாலாஜி சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் தொடர்ச்சியாக 3 வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது.
KIN – Inning
Batsman R B M 4s 6s S/R
Pujara C. c Rao V. b Sammy D. 35 32 42 6 0 109.38
Sehwag V. c Sammy D. b Mishra A. 30 22 24 2 3 136.36
Maxwell G. c Sammy D. b Mishra A. 95 43 56 5 9 220.93
Miller D. A. c Warner D. b Kumar B. 10 10 26 0 1 100.00
Bailey G. c Warner D. b Kumar B. 10 8 19 1 0 125.00
Johnson M. b Kumar B. 4 6 10 0 0 66.67
Patel A. not out 0 0 5 0 0 0
Extras: (w 3, nb 1, lb 5) 9
Total: (20 overs) 193 (9.7 runs per over)
Bowler O M R W E/R
Steyn D. 3.6 0 26 0 7.22
Kumar B. 3.6 0 19 3 5.28
Pathan I. 1.6 0 28 0 17.50
Sharma K. 3.6 0 37 0 10.28
Mishra A. 3.6 0 56 2 15.56
Sammy D. 1.6 0 22 1 13.75
HYD – Inning
Batsman R B M 4s 6s S/R
Steyn D. b Balaji L. 12 16 21 0 0 75.00
Kumar B. c Johnson M. b Dhawan R. 1 3 5 0 0 33.33
Pathan I. b Patel A. 5 9 16 0 0 55.56
Sharma K. c Miller D. A. b Johnson M. 10 8 21 0 1 125.00
Mishra A. not out 4 5 9 0 0 80.00
Sammy D. c Patel A. b Balaji L. 15 11 13 0 1 136.36
Finch A. b Balaji L. 19 15 23 2 1 126.67
Dhawan S. c Saha W. b Johnson M. 1 3 5 0 0 33.33
Warner D. c Maxwell G. b Balaji L. 8 12 21 1 0 66.67
Rahul L. c Miller D. A. b Patel A. 27 27 46 1 1 100.00
Rao V. b Sharma S. 11 9 10 2 0 122.22
Extras: (w 3, nb 2, lb 3) 8
Total: (19.2 overs) 121 (6.3 runs per over)
Bowler O M R W E/R
Maxwell G. 0.6 0 10 0 16.67
Johnson M. 3.6 0 26 2 7.22
Patel A. 3.6 0 20 2 5.56
Sharma S. 3.6 0 26 1 7.22
Balaji L. 3.6 0 13 4 3.61
Dhawan R. 2.2 0 23 1 10.45
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி