டெல்லிக்கு எதிராக பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்றிலும் அமர்க்களப்படுத்திய சென்னை அணி அதே உத்வேகத்தை இந்த ஆட்டத்திலும் காண்பித்து 2-வது வெற்றியை பெறுவதில் முனைப்பு காட்டுகிறது.பிரன்டன் மெக்கல்லம், வெய்ன் சுமித் ஆகியோரின் அதிரடி தொடக்கத்தையே சென்னை அணி பெரிதும் நம்பி இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. இவர்கள் நல்ல தொடக்கத்தை அளிக்கும் பட்சத்தில், அடுத்து வரும் பேட்ஸ்மேன்கள் நெருக்கடியின்றி விளையாடி சவாலான ஸ்கோரை எட்டிவிட முடியும்.
ராஜஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்சை வீழ்த்தியது. பஞ்சாப்புக்கு எதிரான தனது 2-வது லீக்கில் 191 ரன்கள் சேர்த்த போதிலும், மேக்ஸ்வெல்-மில்லர் ஜோடியே இவர்களின் வெற்றிப்பயணத்திற்கும் ‘முட்டுக்கட்டை’ போட்டது.என்றாலும் அந்த ஆட்டத்தில் அரைசதம் அடித்து கேப்டன் ஷேன் வாட்சன் பார்முக்கு திரும்பியிருப்பது, ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் புத்துணர்ச்சியை அளிக்கும். மற்றபடி இவ்விரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் திகழ்வதால், யார் கை ஓங்கும் என்பது கணிப்பது சுலபமல்ல.மொத்தத்தில் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த ஆட்டம் அமையலாம்.இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் மற்றும் சோனி செட்மேக்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி