அதையடுத்து, ஜெய்யை தொடர்பு கொண்டு கேட்டபோது, நான் இசையமைப்பளர் தேவாவின் சகோதரர் சம்பத்தின் மகன். பிறப்பால் இந்துதான். ஆனால், முஸ்லீம் மதத்தின் கொள்கைகள் எனக்கு பிடித்திருந்தது. அதனால் அதை பின்பற்றினேன். அவ்வளவுதான். மற்றபடி நான் முஸ்லீமாகி விட்டதாக வெளியான செய்திகள் உண்மையில்லை என்று மறுக்கிறார் ஜெய்.
ஆனால், இஸ்லாம் மதத்தில மாறுவதற்கு அதிக ஆர்வமாக இருக்கும் ஜெய்க்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்களாம். அதனால்தான் மனசுக்குள் அந்த மார்க்கம் பிடித்திருந்தும், அதை நடைமுறைப்படுத்த முடியாமல் அவர் திணறிக்கொண்டிருப்பதாக, அவருக்கு நெருங்கிய வட்டாரம் தகவல் தருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி