இந்நிலையில் மாடிசார் மாமி பட தலைப்பு குறிப்பிட்ட சமுதாய பெண்களை புண்படுத்துவது போல் உள்ளது என்று எதிர்ப்பு கிளம்பின. தலைப்பை மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. அத்துடன் படத்தை வெளியிட தடை கேட்டு கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.இதைத்தொடர்ந்து படத்தின் தலைப்பை மாற்ற படக்குழுவினர் முடிவு செய்து ‘புளிப்பு இனிப்பு’ என்று புது பெயர் வைத்துள்ளனர்.
இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் சுஷாந்தீசுகத்ரு கூறும்போது, இது முழு நீள காமெடி படம். இரண்டு மணி நேர காமெடி கலாட்டாவாக எடுத்துள்ளோம். மடிசார் மாமி தலைப்புக்கு எதிர்ப்பு கிளம்பியதால் ‘புளிப்பு இனிப்பு’ என மாற்றியுள்ளோம்.அடுத்த மாதம் படம் ரிலீசாகிறது. நீதிமன்றத்தின் உத்தரவினை ஏற்று யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்ற நோக்கத்தோடும் பட தலைப்பை மாற்றி உள்ளோம்’’ என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி