இதனால், தேர்தல் களத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், தங்களின் ஆதரவாளர்கள் மூலம் பெட்டிபெட்டியாக மதுபாட்டில்களை வாங்கி பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர்.இதனால் கடந்த இருநாட்களில் டாஸ்மாக் விற்பனை நாள் ஒன்றுக்கு ரூ. 100 கோடியை தாண்டியிருப்பதாக டாஸ்மாக் தலைமை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் மதுபான கடைகள், கிளப்புகள், ஓட்டல்களில் உள்ள பார்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மதுபாட்டில்களை வாங்கி பதுக்கும் வேலைகளில் பலர் போட்டிபோட்டனர்.நேற்றைய ஒருநாள் விற்பனை சுமார் ரூ. 150 கோடி என்று டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி