அந்த அணியின் மேக்ஸ்வெல் முதல் ஆட்டத்தில் 43 பந்துகளில் 95 ரன்னும், 2-வது ஆட்டத்தில் 45 பந்துகளில் 89 ரன்னும் குவித்து எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். அவருக்கு பக்கபலமாக டேவிட் மில்லரும் இரண்டு ஆட்டத்திலும் அரை சதம் கண்டு அசத்தினார்.மேக்ஸ்வெல், டேவிட் மில்லரின் அதிரடி ஆட்டத்துக்கு ஐதராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள் விரைவில் அணை போட மறந்தால் அவர்களின் நிலை அதோ கதி தான் ஆக நேரிடும். அதேநேரத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்து வீச்சு கடந்த இரண்டு ஆட்டங்களிலும் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சிறப்பாக அமையவில்லை.ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் கடைசி ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. அந்த அணியின் கேப்டன் ஷிகர் தவான், டேவிட் வார்னர் ஆகியோர் நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தாலும் அதன் பின்னர் வந்த வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பினார்கள்.
ஹாட்ரிக் வெற்றி முனைப்புடன் களம் காணும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் நல்ல பந்து வீச்சாளர்கள் உள்ளனர். எனவே இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஐ.பி.எல். போட்டியில் இரு அணிகளும் இதுவரை இரண்டு முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் இரண்டு முறையும் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியே வென்று இருக்கிறது.இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ், சோனி செட்மேக்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி