படத்தைப் பற்றி இயக்குனர் கூறும்போது, ‘கும்கி’ திரைப்படத்திலேயே எனக்கு விக்ரம் பிரபுவின் நடிப்பு பிடித்திருந்தது. எனவே என்னுடைய கதையில் அவர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன். தொடர்ந்து நகர்ப்புற வேடங்களிலேயே அவர் நடித்து வருவதால் இது அவருக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும் என்று நாங்கள் இருவருமே நினைத்தோம். இந்தப் படத்தில் இசைக்குழு நடத்திவரும் எம்.எஸ்.பாஸ்கரின் மகனாக விக்ரம் பிரபு வருகின்றார். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபாடு இருக்கும் போதிலும் தந்தையின் விருப்பத்திற்கேற்ப குடும்பத் தொழிலான இசைக்குழுவில் அவரும் ஒரு பாடகராக மாறுகின்றார். பிரச்சினையில் உள்ள ஒரு இளம்பெண்ணை சந்திக்கும் விக்ரம் பிரபு, அவளுக்கு எவ்வாறு உதவுகின்றார் என்ற வகையில் இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது என்று இயக்குனர் கூறினார்.
தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று இந்த படத்தின் முதல் காட்சி படம் பிடிக்கப்பட்டது. சென்டிமெண்டாக ஒரு காட்சி சிவாஜி சார் வீட்டில் எடுக்கப்பட்டது. ‘சிகரம் தொடு’ படத்திற்காக ஒட்ட வெட்டிய ஹேர்ஸ்டைலில் விக்ரம் பிரபு இருப்பதால் அவருக்கு முடி வளர்ந்தபின் வரும் மே மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும் என்று எழில் குறிப்பிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி