இதுகுறித்து நாட்டின் முன்னணி செய்தி நிறுவனமான ஐ.ஏ.என்.எஸ்-சிடம் தொலைபேசி வாயிலாக அவர் தெரிவித்ததாவது:-நான் எனது வழக்கமான, செயற்கைக்கோள் படங்களை ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தேன்.அப்போது திடீரென அந்த வரைபடத்தில் அகாபுல்கோ பகுதிக்கு அருகே இருந்த மெக்சிகோ கடற்கரையில் நிலநடுக்கம் தோன்றுவதற்கான ஆரம்பநிலை அறிகுறிகளை கண்டேன்.நீண்ட அலை கதிரியக்கம் (ஓ.எல்.ஆர்) மற்றும் கடலின் மேற்பரப்பு வெப்பநிலை (எஸ்.எஸ்.டி) ஆகிய இரண்டு நில அதிர்வு முன்னோடிகளை பயன்படுத்தி இதைக் கண்டுபிடித்தேன்.
அமெரிக்க செயற்கைக்கோள்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில், கடலில் ஏற்படும் தற்காலிக மாற்றங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது இந்த கணிப்பை உறுதி செய்தேன். பிறகு இதை கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து ஆய்வு செய்து கண்காணித்து வந்தேன்.இதற்கிடையில், என்னுடைய இந்த ஆய்வுக்குறிப்பை கடந்த ஜனவரி மாதம் இ.மெயில் மூலம் மெக்சிகோவின் புகழ்பெற்ற நிலநடுக்க ஆராய்ச்சியாளரான பேரா.சின்னா லோம்னிட்ஸ்க்கு அனுப்பினேன்.இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி