கேரளா:-மம்மூட்டி மலையாளத்தில் நடித்திருக்கும் படம் ‘கேங்ஸ்டர்’.இப்படத்துக்கு தணிக்கை அதிகாரிகள் ஏ சான்றிதழ் வழங்கினார்கள். கடந்த வாரம் படம் திரைக்கு வந்தபோது போஸ்டர் மற்றும் விளம்பரங்களில் ஏ சான்றிதழ் பற்றி குறிப்பிடப்படவில்லை.
இதையடுத்து அப்பட தயாரிப்பாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தணிக்கை குழு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி தணிக்கை குழு பிராந்திய அதிகாரி ஜேக்கப் கூறும்போது,சினிமோட்டோகிராப் தணிக்கை விதிப்படி ஒவ்வொரு பட விளம்பரம், போஸ்டரில் தணிக்கை குழு என்ன சான்றிதழ் வழங்கியதோ அதை குறிப்பிட வேண்டும்.
கேங்ஸ்டர் பட விளம்பரத்தில் இது பின்பற்றப்படவில்லை. இதனால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப தணிக்கை குழு முடிவு செய்துள்ளது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி