இதற்காக என்னிடம் பணம் பெற்றிருந்தார். சில காரணங்களால் அப்படம் டிராப் ஆனது. ஆனால் என்னிடம் வாங்கிய பணத்தை அவர் திருப்பி தரவில்லை. இது சர்ச்சையாக உருவானபோது பணத்தை எப்படியாவது திரும்ப தருவதாக எனக்கு தகவல் அனுப்பினார். ஆனால் எனக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. சட்டப்படி இப்பிரச்னையை தீர்க்க முடியும்.
இந்த போராட்டத்தில் நான் தனி ஆளாக இருக்கிறேன். இவ்வாறு சோனா கூறினார். ஏற்கனவே இப்பிரச்னையின்போது பதில் அளித்திருந்த வெங்கட்பிரபு, என் மீது சோனா சொல்லும் புகாரில் உண்மை இல்லை. அவரிடம் பணம் வாங்கவில்லை என்று குறிப்பிட்டார். ஆனால் தற்போது மீண்டும் இப்பிரச்னை எழுந்துள்ளது. ஆனால் வெங்கட்பிரபு மவுனம் காக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி