செய்திகள் அமெரிக்க அழகியை நடனமாட சொன்ன மாணவன் சஸ்பெண்டு!…

அமெரிக்க அழகியை நடனமாட சொன்ன மாணவன் சஸ்பெண்டு!…

அமெரிக்க அழகியை நடனமாட சொன்ன மாணவன் சஸ்பெண்டு!… post thumbnail image
நியூயார்க்:-மிஸ் அமெரிக்கா அழகி பட்டம் வென்றவர் ‘நினா டவுலூரி’. அமெரிக்க வாழ் இந்தியர். இவர் பென்சில் வேனியாவில் உள்ள சென்ட்ரல் பார்க் உயர்நிலைப்பள்ளிக்கு ஒரு விழாவில் பங்கேற்க வந்திருந்தார்.

அங்கு அவர் மாணவர்கள் மத்தியில் கலாசார வேற்றுமை, அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணித பாடத்தின் முக்கியத்துவம் குறித்து பேச இருந்தார். அதற்கு முன்னதாக மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார்.அப்போது பாட்ரிக் பார்வெஸ் (18) என்ற மாணவன் அழகி நினா டவுலூரியை மேடையில் நடனமாடும்படி வலியுறுத்தினான். மேலும் மேடைக்கு சென்று அவரிடம் பிளாஸ்டிக் பூ ஒன்றையும் பரிசளித்தான்.

மாணவன் பாட்ரிக்கின் இச்செயலை கண்டு அழகி நினா டவுலூரி கோபம் அடையவில்லை. மாறாக சிரித்து சமாளித்தார். அதை பார்த்து சக மாணவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.ஆனால் இது பள்ளி நிர்வாகத்துக்கு எரிச்சலையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அவனை பள்ளியில் இருந்து 3 நாட்கள் சஸ்பெண்டு செய்து உத்தரவிடப்பட்டது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி