செய்திகள்,திரையுலகம் விஜய்மில்டன் இயக்கத்தில் நடிக்கும் டி.ராஜேந்தர்!…

விஜய்மில்டன் இயக்கத்தில் நடிக்கும் டி.ராஜேந்தர்!…

விஜய்மில்டன் இயக்கத்தில் நடிக்கும் டி.ராஜேந்தர்!… post thumbnail image
சென்னை:-‘கோலிசோடா’ படத்தை இயக்கிய விஜய்மில்டன், தற்போது ஏ.ஆர்.முருகதாஸின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்துக்காக விக்ரமை வைத்து ஒரு படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதேசமயம், இன்னொரு படத்திற்கான ஸ்கிரிப்டையும் அவர் ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம். அந்த படத்தில் டி.ராஜேந்தர் நடிக்கப்போகிறாராம்.கதாநாயகன் என்பதில்லாமல் கதையின் நாயகனாக அவரை வெளிப்படுத்தும் கதையாம் இது. ஒருவேளை தற்போது தான் விக்ரமைக்கொண்டு இயக்கும் படம் சிறிது காலதாமதம் ஆக நேர்ந்தால், அந்த இடைவெளியில் டி.ஆர் நடிக்கும் படத்தை ஆரம்பித்து விடுவாராம் விஜய் மில்டன்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி