செய்திகள் மேற்கு வங்கத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்து 450 கிலோ குண்டு கண்டுபிடிப்பு!…

மேற்கு வங்கத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்து 450 கிலோ குண்டு கண்டுபிடிப்பு!…

மேற்கு வங்கத்தில் இரண்டாம் உலகப் போர் காலத்து 450 கிலோ குண்டு கண்டுபிடிப்பு!… post thumbnail image
கொல்கத்தா:-மேற்கு வங்காள மாநிலம், மிட்னப்பூர் மாவட்டத்தில் கலைகுண்டா ராணுவ விமானதளம் உள்ளது. இதன் அருகே உள்ள மவுலிஷோல் கிராமத்தில் இருக்கும் துணை மின் நிலையத்தில் விளக்கு கம்பம் நடுவதற்காக ஊழியர்கள் பள்ளம் தோண்டினர்.

சுமார் 3 அடி ஆழம் தோண்டிய போது, கடப்பாரை ஏதோ ஒரு உலோகத்தின் மீது மோதுவதை உணர்ந்த ஊழியர்கள், மண்ணை கையினால் அகற்றிப் பார்த்து, இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட 450 கிலோ எடையுள்ள வெடிகுண்டு 4 அடி நீளத்தில் கம்பீரமாக வீற்றிருந்தது.தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அந்த வெடி குண்டினை கைப்பற்றி பத்திரமாக கொண்டு சென்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி