சென்னை:-‘கோலி சோடா‘ படத்தை இயக்கிய விஜய் மில்டன் அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இது பற்றி விஜய்மில்டன் கூறும்போது, விக்ரம் ஜோடியாக சமந்தா நடிக்க உள்ளார்.
வரும் வாரத்தில் சமந்தாவை சந்தித்து இப்படத்தின் ஸ்கிரிப்ட் சொல்ல உள்ளேன். அதன்பிறகு அவர் கால்ஷீட் பற்றி முடிவாகும் என்றார். சமந்தா ஏற்கனவே கோலி சோடா படம் பற்றி தனது இணையதள பக்கத்தில் பாராட்டு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி