அபுதாபி:-ஐ.பி.எல். 7வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன.டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது.
சென்னை அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரெண்டன் மெக்கல்லம், மற்றும் ஸ்மித் இருவரும் அதிரடியாக ஆடி அரை சதம் அடித்து அசத்தினார்.இதனால் சென்னை அணி 9.3 ஓவரிலேயே 100 ரன்களை கடந்தது.சென்னை அணியில் அதிகபட்சமாக மெக்கல்லம் 45 பந்துகளில் 4, பவுண்டரி, 5, சிக்சர் உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஸ்மித் 43 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சென்னை அணி ஐ.பி.எல். வரலாற்றில் 10 முறை 200 ரன்களுக்கு மேலாக குவித்த ஒரே அணியாகும். இதனை அடுத்து 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்குகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி