அரசவையில் காலியாகும் அந்த மந்திரிப் பதவியை தனது புத்திக்கூர்மையால் கைப்பற்றுகிறார் தெனாலிராமனான மற்றொரு வடிவேலு.உண்மையில் தெனாலிராமன் அரசவையில் இடம்பிடித்தது ஆட்சிபுரிய அல்ல.மக்களுக்கு நன்மை செய்யாமல் இருக்கும் மன்னனை கொலை செய்வதற்கு மாறுவேடத்தில் வந்த போராளி. ஆனால்,அரண்மனைக்குள் நுழைந்தபிறகுதான் தெரிகிறது.இத்தனைக்கும் காரணம் மந்திரிகள் தான் என்று.ஆனாலும் மந்திரிகள் தெனாலிராமன் மேல் பழி சுமத்தி, அரண்மனையை விட்டே விரட்டுகிறார்கள். மீண்டும் மன்னரும் தெனாலிராமனும் இணைந்தார்களா? மன்னர் திருந்தினாரா? இளவரசியை கரம்பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
மன்னர்,தெனாலிராமன் என இருவேடங்களில் நடித்தாலும் வித்தியாசம் காட்டி கலக்குகிறார்.டைமிங் வசனம், பாடி லாங்குவேஜ் என தனது ஸ்டைலை அப்படியே வைத்து இருக்கிறார்.கதாநாயகி மீனாட்சி தீக்ஷித் ஒரே ஒரு பாடலில் வடிவேலுவுடன் ஆடிப்பாடியிருக்கிறார். மந்திரி மேல் காதல் கொள்ளும் இளவரசி வேடத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார். இது குழந்தைகள் படம் என்ற தோற்றம் வந்துவிடக்கூடாது என்பதால் படம் முழுக்க கவர்ச்சியுடனும் வலம் வருகிறார்.மந்திரிகளில் மனோபாலா தான் கலக்கியிருக்கிறார்.காமெடி வில்லன்களாகவே ஒன்பது பேரும் வருகிறார்கள். குறுநில மன்னராக வரும் ராதாரவி பொருத்தமாக இருக்கிறார். தேவதர்ஷிணி நல்ல நகைச்சுவை நடிகையாக வலம் வருகிறார். ஹீரோயினின் அம்மாவாக ஒரு காட்சியில் வலம் வருபவர் தன் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.மன்னருக்கும் தெனாலிராமனுக்கும் உருவாகும் நட்பை அழகாக திரையில் கொண்டு வந்தது. ஆரூர்தாஸின் அற்புதமான வசனங்கள் சிறப்பு. ராம்நாத் ஷெட்டியின் அற்புதமான ஒளிப்பதிவு. இமானின் இசையமைப்பில் ‘பாடல்கள் கேட்க இனிமையாக இருக்கின்றன.
மொத்தத்தில் ‘தெனாலிராமன்’ நகைச்சுவை கொண்டாட்டம்……
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி