அவர் ஒரு ஆட்டத்தை கூட தவறவிடாமல் 99 போட்டியில் ஆடி இருக்கிறார். அவர் 2,802 ரன் எடுத்து ரன் குவிப்பில் முதல் இடத்தில் உள்ளார். ஒரு சதமும், 18 அரை சதமும் எடுத்துள்ளார். 239 பவுண்டரியும், 115 சிக்சர்களும் அடித்துள்ளார். ஸ்ரைக்ரேட் 141.37 ஆகும்.மேக்குல்லம் சுமித் போன்ற புதுமுக வரவு மூலம் சென்னை அணி புதிய பலத்தை பெறும். வெற்றியுடன் கணக்கை தொடங்க சென்னை சூப்பர் கிங்ஸ் திட்டமிட்டு உள்ளது.
சென்னை அணிக்கு எல்லா வகையிலும் சவால் விடக்கூடிய சிறந்த அணியாக பஞ்சாப் உள்ளது. பெய்லி தலைமையிலான அந்த அணியில் ஷேவாக், டெவிட் மில்லர், பெரைரா, மிச்சேல், ஜான்சன், புஜாரா போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் சோனி செட்மேக்ஸ் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி