செய்திகள் எவரெஸ்ட் பனிச்சரிவில் சிக்கி 13 மலையேற்ற வீரர்கள் பலி!…

எவரெஸ்ட் பனிச்சரிவில் சிக்கி 13 மலையேற்ற வீரர்கள் பலி!…

எவரெஸ்ட் பனிச்சரிவில் சிக்கி 13 மலையேற்ற வீரர்கள் பலி!… post thumbnail image
காத்மாண்டு:-எவரெஸ்ட் மலையில் இந்த மாத இறுதியில் மலையேற்ற சீசன் தொடங்க உள்ள நிலையில் அங்கு இன்று அதிகாலையில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் 6 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் அனைவரும், மலையேற்ற வீரர்களுடன் துணையாகச் செல்லும் ஷெர்பாக்கள் என்று கூறப்படுகிறது.

பனிச்சரிவு ஏற்பட்டதும் விரைந்து வந்த மீட்புக் குழுவினர் 13 பேரின் உடல்களை மீட்டனர். பனிப்பாறைகளுக்குள் சிக்கி உயிருக்குப் போராடிய 2 பேரைக் காப்பாற்றி அடிவாரத்தில் உள்ள முகாமிற்கு கொண்டு வந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் யாரேனும் பனிச்சரிவில் சிக்கியிருக்கிறார்களா? என்பதை கண்டுபிடிக்க தேடும் பணி நடைபெற்று வருகிறது.

கடல் மட்டத்தில் இருந்து 5800 மீட்டர் உயரத்தில் பாப்கான் பீல்டு என்று அழைக்கப்படும் பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டதாகவும், மேலும் சிலர் இதில் காயம் அடைந்திருக்கலாம் என்றும் ஒரு ஷெர்பா கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி