சென்னை:-உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் குரு தனபால். தொடர்ந்து தாய் மாமன், மாமன் மகள், பெரிய இடத்து மாப்பிள்ளை, பெரிய மனுஷன் போன்று சில படங்களை இயக்கியுள்ளார்.
சினிமாவில் வாய்ப்பு குறைந்த பின்னர் தனது சினிமா நண்பர்கள் மற்றும் உறவினர்களை பார்ப்பதற்காக அடிக்கடி கோவை வந்து சென்றுள்ளார் குரு தனபால்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவை வந்த குரு தனபாலுக்கு, தமிழ்புத்தாண்டு அன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று இறந்தார். சென்னையில் வசித்து வரும் குரு தனபாலுக்கு உமாதேவி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். குரு தனபாலின் உடல் கோவையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி