சென்னை:-டைரகடர் விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தில் அமலாபால் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.அதன் பிறகு விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த ‘தலைவா’ படத்திலும் அமலா பால் நடித்தார். இவர்களது காதல் விவகாரம் பற்றி ஏற்கனவே கிசுகிசுக்களை இருவரும் மறுத்து வந்தனர்.
இந்நிலையில் டைரகடர் விஜய் வெளி நாட்டில் இருந்து திரும்பியதும் எங்கள் எதிர்காலம் குறித்து அறிவிப்போம் என்று அறிக்கை வெளியிட்டார்.
இவர்கள் காதலை அமலா பாலின் தாய் அனீஸ் பால் இதை உறுதிபடுத்தி உள்ளார். அவர் கூறும் போது அமலாபால் அடிக்கடி விஜய்யுடன் போனில் பேசி வந்தார். இதை வைத்து இருவரும் காதலிப்பதை தெரிந்து கொண்டோம் என்று கூறியுள்ளார்.
தற்போது விஜய் வெளி நாட்டில் இருந்து திரும்பி விட்டார்.இதையடுத்து திருமண ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என கூறப்படுகிறது. இருவருக்கும் கொச்சியில் அடுத்த மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி