சென்னை:-அஜித் நடிக்கும் படத்தில் நெகடீவான ரோலில் நடிக்க த்ரிஷாவிடம் கேட்டார் கெளதம்மேனன்.அஜித்துடன் மங்காத்தா படத்தில் டூயட் பாடிய தன்னை வில்லியாக நடிக்க கேட்டவுடன் தெலுங்கில் ஒரு படம் உள்ளது.
தமிழில் சிம்புவுடன் செல்வராகவன் இயக்கும் அலைவரிசையில் நடிக்கிறேன். அதனால், இப்போதைக்கு கால்சீட் தருவது கொஞ்சம் கஷ்டம் என்று சொல்லி தேடிவந்த வாய்ப்பை தட்டிக்கழித்து விட்டார் த்ரிஷா.
இதே காரணத்துக்காகத்தான் முன்பு இந்த வேடத்துக்காக பேசப்பட்டு வந்த ‘ஐ’ பட நாயகி எமி ஜாக்சனும் கழண்டு கொண்டாராம். அதனால் இப்போது அந்த வேடத்தில் பரதேசி தன்ஷிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி