சேஸிங், ஆக்ஷனோட ஃபோர்ஸான காதலும் இந்த படத்துல இருக்கு. முக்கோணக் காதல் கதை மாதிரி, இது முக்கோண ஆக்ஷன் கதை. கோயம்புத்துர்ல ஆரம்பிக்கிற கதை பீகார்ல போய் முடியும்.ஏழு வருஷத்துக்கு முன்னாடி விஷாலோட ‘தாமிரபரணி’ பண்ணேன். அது முழு நீள ஆக்ஷன் படம் கிடையாது. ‘விட்டுக் கொடுத்தா வாழ்க்கையில பிரச்சனை இல்லைன்னு குடும்ப செண்டிமெண்ட் தான் மெசேஜ்’. இந்த ஏழு வருஷத்தில் ஆக்ஷன், டான்ஸ் மட்டுமில்லாம ஒரு பெர்ஃபாமராவும் விஷால் வளர்ந்திருக்கார். அதேமாதிரி ‘பூஜை’யும் நான் ஏற்கனவே பண்ண படங்களின் பெட்டர் வெர்ஷனா இருக்கும். இப்படி எங்க ரெண்டு பேருக்கும் அடுத்த லெவல் பாய்ச்சலா இருக்கும் இந்த படம்.
படத்துக்கு ரொம்ப மாடர்னா ஒரு பொண்ணு தேவைபட்டாங்க. அந்த மாடர்ன் லுக், புரொஃபஷனல் டச் எல்லாமே ஸ்ருதிக்கு கரெக்ட் மேட்ச். என் படங்கள்ல இருந்து விலகி ரொம்ப மாடர்னா ஒரு லவ் போர்ஷன் வெச்சிருக்கோம். ஆரம்பத்தில் இருந்து க்ளைமாக்ஸ் வரை ஸ்ருதிக்கு படத்துல வேலை இருந்துட்டே இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி