ரம்யா கிருஷ்ணன் ஜெனரேட்டர் நிறுவனம் ஒன்றின் மீது நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 2010– ஆண்டு ஜூலை மாதம் 23–ந்தேதி ரூ.4 லட்சத்து 68 ஆயிரத்துக்கு கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏஜென்சியிடம் ஜெனரேட்டர் வாங்கியதாகவும் அது வாங்கிய சில நாட்களிலேயே பழுதாகி விட்டதாகவும் புகாரில் குறிப்பிட்டு இருந்தார். புது ஜெனரேட்டர் வழங்கும்படி ஏஜென்சிக்கு நோட்டீஸ் அனுப்பினேன். அவர்கள் மறுத்துவிட்டனர் என்றும் புகாரில் கூறி இருந்தார்.
இந்த வழக்கை நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி ஆர்.மோகன்தாஸ் உறுப்பினர் கலையரசி ஆகியோர் விசாரித்தனர். இரு தரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து ஜெனரேட்டர் நிறுவனமும் ஏஜென்சியும் ரம்யா கிருஷ்ணனுக்கு ரூ.52 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் ஜெனரேட்டருக்கு கொடுத்த 4 லட்சத்து 68 ஆயிரத்தையும் ரம்யாகிருஷ்ணனுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி