சென்னை:-வடிவேலு இரு வேடங்களில் நடிக்கும் ‘தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்தி காட்சிகள் வைத்துள்ளதாகவும் எனவே அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் தெலுங்கு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.வடிவேலு வீட்டை முற்றுகையிட்டும் போராட்டம் நடத்தினர்.
படத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் வடிவேலுக்கு ஆதரவும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், படத்தை எப்படியாவது வெளிக்கொண்டு வரவேண்டும் என தெலுங்கு அமைப்பினரும், தெனாலிராமன் படத் தயாரிப்பாளர்களும் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ‘தெனாலிராமன்’ திட்டமிட்டப்படி நாளை வெளியாவது உறுதியாகியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி