செய்திகள்,திரையுலகம் திரைப்படமாகும் அன்னா ஹசாரேவின் வாழ்க்கை!…

திரைப்படமாகும் அன்னா ஹசாரேவின் வாழ்க்கை!…

திரைப்படமாகும் அன்னா ஹசாரேவின் வாழ்க்கை!… post thumbnail image
மும்பை:-சமூக ஆர்வலரும், காந்தியவாதியுமான அன்னா ஹசாரேவின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க அவரிடமிருந்து முறையான அனுமதியை பெற்றிருப்பதாக திரைப்பட இயக்குனர் சாஷங் உதாபூர்கர் இன்று தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:-

அன்னா ஹசாரேவின் திரைக்கதையை எழுதி முடிப்பதற்கு எனக்கு நீண்ட காலமானது. அவரது வாழ்க்கை வரலாற்றை முழுமையாக எழுதி முடிப்பதற்கு முன்னதாக 7 திரைக்கதைகளாக உருவாக்கியுள்ளேன். அவரது 75 ஆண்டுகால வாழ்க்கையை இரண்டரை மணிநேர படமாக எடுப்பது மிகப்பெரிய சவாலாகும்.அன்னா ஹசாரே பற்றிய இந்த படத்தை அனிருதா.எஸ்.கைகார் தயாரிக்கிறார். மும்பை, டெல்லி, காஷ்மீர், லடாக், ராஜஸ்தான் மற்றும் பல இடங்களில் படப்பிடிப்புகள் நடைபெற உள்ளன.

இந்தியர்களை மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமுள்ள மக்களை ஈர்க்கும் விதமாக இந்த படத்தை உருவாக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்த சாமானியன், ஒழுக்கம், எளிமை, நாட்டுப்பற்று, மனிதநேயத்துடன் கூடிய நாட்டின் நாயகனாக எவ்வாறு மாறினான் என்பதை மக்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி