செய்திகள் அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக அல் கய்தா மிரட்டல்!…

அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக அல் கய்தா மிரட்டல்!…

அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்போவதாக அல் கய்தா மிரட்டல்!… post thumbnail image
துபாய்:-அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, அல் கய்தா தீவிரவாதிகள் விமானங்களை கடத்தி இரட்டை கோபுரத்தின் மீது மோத செய்து தாக்குதல் நடத்தினர். அப்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாயினர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். அதன்பின், பாகிஸ்தானில் பதுங்கி இருந்த அல் கய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க கடற்படையினர் சுட்டுக் கொன்றனர். எனினும், அமெரிக்காவை தீவிரவாதிகள் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஏமனில் உள்ள அல் கய்தா பிரிவு தலைவர்கள், அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். ஏமன் தலைநகர் சனாவில் உள்ள சிறையில் கடந்த வாரம் அல் கய்தா தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர். சிறையை உடைத்துக் கொண்டு 19 அல் கய்தா தீவிரவாதிகள் தப்பினர். அதை ஆடி பாடி தீவிரவாதிகள் கொண்டாடும் காட்சிகள் அடங்கிய வீடியோவை ஆன்லைனில் அல் கய்தா தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

15 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் முகமூடி அணிந்த தீவிரவாதிகள் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். அமெரிக்கா மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம் என்று தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி