சென்னை:-சரண் இயக்கத்தில் அஜித்,ஷாலினி நடித்து 1999ம் ஆண்டு வெளியான அஜித்தின் 25வது படம் ‘அமர்க்களம்’.வெளியாகி படம் ரசிகர்களிடத்திலும் வணிக ரீதியிலும் பெரும் வெற்றி பெற்றது. பரத்வாஜ் இசையமைத்த இப்படத்திற்கு ஏ.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
வருகிற மே 1ம் தேதி அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ‘அமர்க்களம்’ படம் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. படத்தின் ஒளி மற்றும் ஒலி மெருகேற்றி ரிலீஸ் செய்ப்பட இருக்கிறதாம் ‘அமர்க்களம்’.
இதற்குமுன் சிவாஜி நடித்த ‘கர்ணன்’ எம்ஜி.ஆர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ ரஜினி நடித்த ‘சிவாஜி’ போன்ற படங்கள் தொழில்நுட்ப மாற்றங்களுடன் மறுவெளியீடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.இப்படத்தின் போது அஜித்,ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி