சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் படம் ‘கத்தி‘. இதற்கு அடுத்து சிம்புதேவனுடன் இயக்கம் படத்தில் நடிக்க போகிறாராம் விஜய்.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தில் ஸ்ரீதேவி , ‘நான் ஈ’ படத்தில் நடித்த சுதீப் ஆகியோர் நடிக்க இருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கலாம் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கிற நேரத்தில் இப்படத்தில் பணியாற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி இன்னும் எந்தத் தகவலும் இல்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி