இந்தநிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் தான் ஆன்ட்டி ஆகிவிட்டதாக வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். எனது சகோதரர் விசாக் தேவ் மணி,பிரார்த்தனா தம்பதிக்கு சமீபத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இன்றுமுதல் நான் ஆன்ட்டி ஆகிவிட்டேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் இதை தெரிவித்திருக்கிறார்.
தற்போது கன்னடத்தில் அப்பரீஷா என்ற படத்தில் நடித்து வரும் பிரியாமணி ஷூட்டிங்கிற்கு லீவு போட்டுவிட்டு அண்ணன் குழந்தையுடன் கொஞ்சி விளையாடிக்கொண்டிருக்கிறார். குழந்தையை பிரியாமணி கொஞ்சுவதை கண்ட அவரது அம்மா, மகளுக்கும் கல்யாண ஆசை வந்துவிட்டது என்று சொல்கிறாராம்.இது பற்றி பிரியாமணி சொல்லும்போது, வயது கடந்து வருவது நிஜம்தான். அதற்காக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றால் எப்படி.திருமணம் செய்யும் எண்ணம் எனக்கு இன்னும் வரவில்லை. அது வரும்போதுதான் அதை பற்றி சிந்திப்பேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி