செய்திகள்,திரையுலகம் அஜித் படத்தில் கௌதம் மேனனுடன் மீண்டும் இணைந்த ஹாரீஸ் ஜெயராஜ்!…

அஜித் படத்தில் கௌதம் மேனனுடன் மீண்டும் இணைந்த ஹாரீஸ் ஜெயராஜ்!…

அஜித் படத்தில் கௌதம் மேனனுடன் மீண்டும் இணைந்த ஹாரீஸ் ஜெயராஜ்!… post thumbnail image
சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார்.இந்த படத்தின் மூலம் முதன்முதலாக கௌதம் மேனனுடன் கைகோர்த்திருக்கும் அஜித் இப்படத்தில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் வரவிருக்கிறாராம்.

கௌதம் மேனன் படத்தில் கதை எந்த அளவுக்கு பேசப்படுமோ அதேபோல் அவரது படங்களில் இடம்பெறும் இசையும் பெரிய அளவில் பேசப்படும். இவரும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜூம் இணைந்து பணியாற்றிய பல படங்கள் இசையில் பெரிய அளவில் வெற்றி பெற்றன. பின்னர், ஒரு சில காரணங்களால் பிரிந்த இவர்கள் மீண்டும் இந்த படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்கள்.

இப்படத்தை சத்ய சாய் மூவிஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். டான் மெகர்துர் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜீவன் ஆர்ட் டைரக்ட் செய்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி