அரசியல்,செய்திகள்,திரையுலகம் ரஜினியுடன் மோடி சந்திப்பு!…

ரஜினியுடன் மோடி சந்திப்பு!…

ரஜினியுடன் மோடி சந்திப்பு!… post thumbnail image
சென்னை:-பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி அக்கட்சியின் வேட்பாளரான இல.கணேசனை ஆதரித்து பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக சென்னை வந்தார்.

அவர் நடிகர் ரஜினிகாந்த்தை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார்.சந்திப்பு முடிந்து இருவரும் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ரஜினி, தனக்கு உடல்நிலை சரியில்லாதபோது மோடி தன்னை சந்தித்ததை நினைவு கூர்ந்தார்.

அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மோடி அவர்களை தனது இல்லத்திற்கு வந்து தேநீர் அருந்துமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். அதனையேற்று மோடி இன்று தனது இல்லத்திற்கு வந்ததாக தெரிவித்த ரஜினி இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று உறுதிப்படுத்தினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி