சென்னை:-வீரம் படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் புதிய படத்தினை கவுதம்மேனன் இயக்குகிறார்.இப்படத்தில் அஜித் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். ஏ.எம். ரத்னம் தயாரிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படபூஜை சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது.தற்போது படப்பிடிப்பும் துவங்கியுள்ளது.சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் படப்படிப்பு நடந்து வருகிறது.
அஜித், அனுஷ்கா நடிக்கும் காட்சிகளை கவுதம் மேனன் படமாக்கி வருகிறார். நவம்பர் மாதம் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி