செய்திகள்,திரையுலகம் 40 நாள் சிகிச்சை முடிந்து பெங்களூர் திரும்பினார் நடிகர் அம்பரீஷ்!…

40 நாள் சிகிச்சை முடிந்து பெங்களூர் திரும்பினார் நடிகர் அம்பரீஷ்!…

40 நாள் சிகிச்சை முடிந்து பெங்களூர் திரும்பினார் நடிகர் அம்பரீஷ்!… post thumbnail image
பெங்களூர்:-பிரபல நடிகர் அம்பரீஷ் மூச்சுத் திணறலால் பெங்களூரில் சிகிச்சை பெற்ற அவர் மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செவ்லப்பட்டார்.சிங்கபூரில் 40 நாட்கள் சிகிச்சை முடிந்து அம்பரீஷ் மனைவி நடிகை சுமலதா வுடன் பெங்களூர் திரும்பினார்.

விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள், ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது வீட்டில் சில பெண்கள் ஆரத்தி எடுத்தனர். ரசிகர்கள் மத்தியில் அம்பரீஷ் பேசியதாவது:–சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் நான் சில நாட்கள் சிகிச்சை பெற்றேன்.

எனது உடல்நலத்துக்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.நான் தேர்தல் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளேன்.இவ்வாறு அம்பரீஷ் கூறியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி