செய்திகள்,திரையுலகம் லவ் பிரேக்அப் பற்றி பேச விரும்பாத நடிகை!…

லவ் பிரேக்அப் பற்றி பேச விரும்பாத நடிகை!…

லவ் பிரேக்அப் பற்றி பேச விரும்பாத நடிகை!… post thumbnail image
சென்னை:-பீட்சா படத்தில் நடித்த ரம்யா நம்பீசன் ஒரு வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் நடிக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: பீட்சா படம் வெற்றி அடைந்ததையடுத்து தமிழில் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அதை ஏற்க முடியவில்லை.

1 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது தமிழில் டமால் டுமில் படத்தில் நடித்திருக்கிறேன். இதுவொரு லவ் த்ரில்லர் காமெடி படம். வைபவ் ஹீரோ. ஸ்ரீ இயக்குகிறார். தமன் இசை அமைக்கிறார். சி.ஜே. ஜெயகுமார் தயாரிக்கிறார்.பாய் பிரண்ட் ஒருவரை காதலித்தேன். குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு இருவருமே அதை பிரேக் அப் செய்துகொண்டோம்.

இப்போது நான் யாரையும் காதலிக்கவில்லை. இதற்கு மேல் இந்த விஷயம் பற்றி பேச விரும்பவில்லை. பொதுவாக நான் நடிக்கும் படங்களில் பாடலுக்கென்று தனியாக சம்பளம் கேட்பதில்லை. நான் நடிக்காத படங்களில் பாடும்போது மட்டும் அதற்கான சம்பளம் வாங்குகிறேன். இவ்வாறு ரம்யா நம்பீசன் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி