செய்திகள் மாயமான மலேசிய விமான விமானியின் செல்போன் நடுவானில் அழைப்பு!…

மாயமான மலேசிய விமான விமானியின் செல்போன் நடுவானில் அழைப்பு!…

மாயமான மலேசிய விமான விமானியின் செல்போன் நடுவானில் அழைப்பு!… post thumbnail image
கோலாலம்பூர்:-மலேசியாவிலிருந்து கடந்த மாதம் 8-ம் தேதி 239 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் நடுவானில் திடீரென்று மாயமானது. இதன்பின்னர் நடைபெற்ற தேடுதல் விசாரணையில் விமானம் குறித்து பல வதந்திகள் பரவி வந்தன. கறுப்பு பெட்டியில் இருந்து சமிக்ஞை கிடைத்திருப்பதாக கூறி, அந்த பகுதியில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இவ்விமானம் குறித்த புது தகவலை மலேசிய பத்திரிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் விமானம் ரேடார் கண்காணிப்பில் இருந்து விடுபடும் முன், அதாவது பெனாங் தீவிற்கு அருகே விமானத்தின் துணை விமானியான பரிக் அப்துல் ஹமித், தனது செல்போனில் இருந்து ஒரு எண்ணுக்கு டயல் செய்ததும், அது உடனடியாக நின்றுவிட்டதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விமானியின் செல்போன் அழைப்பு குறித்து செல்போன் கோபுரத்தில் பதிவாகியுள்ளது. ஆனால் அத்தொடர்பு ஏன் உடனடியாக துண்டிக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஒருவேளை விமானம் வேகமாக இயங்கியதால், சிக்னல் கிடைக்காமல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கலாம் என்றும் மலேசிய பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
விமானியின் செல்போன் அழைப்பு தகவல்களை ஆராய்ந்த போது அந்த அழைப்பு, அடிக்கடி அவர் பேசும் எண்ணுக்கு தொடர்பு கொண்டது உறுதியாகி உள்ளது. இதுகுறித்து மேலும் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி