செய்திகள்,திரையுலகம் படமாகும் நடிகை மனிஷா கொய்ராலாவின் வாழ்க்கை!…

படமாகும் நடிகை மனிஷா கொய்ராலாவின் வாழ்க்கை!…

படமாகும் நடிகை மனிஷா கொய்ராலாவின் வாழ்க்கை!… post thumbnail image
மும்பை:-நடிகை மனிஷா கொய்ராலா 1989–ல் சினிமாவுக்கு வந்தார். தமிழில் பம்பாய் படம் மூலம் அறிமுகமானார். 1995–ல் இப்படம் வந்தது, முதல்வன், பாபா, மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தார்.

மனிஷா கொய்ராலாவுக்கும் சாம்ராட் தஹால் என்ற தொழில் அதிபருக்கும் 2010–ல் திருமணம் நடந்தது. 2012–ல் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். விவாகரத்தும் செய்து கொண்டனர். அதன் பிறகு மனிஷா கொய்ராலாவை புற்று நோய் தாக்கியது. அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். தற்போது குணமாகி இந்தியா திரும்பியுள்ளார்.

மனிஷா கொய்ராலா வாழ்க்கை வரலாறு படத்தில் இவை அனைத்தும் இடம் பெறுகிறது. இந்த படத்தை எடுப்பதற்கு மனிஷா கொய்ராலாவும் அனுமதி கொடுத்துள்ளார். இந்தியில் தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியிடப்படுகிறது. மனிஷா கொய்ராலா கேரக்டரில் நடிக்க நடிகை தேர்வு நடக்கிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி