சென்னை:-ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார், ஷோபனா, ஆதி, ருக்மணி உள்ளிட்ட பலர் நடிப்பில், மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாராகி இருக்கும் படம் ‘கோச்சடையான்‘.
சௌவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். மீடியா ஒன் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தினை ஈராஸ் நிறுவனம் வெளியிடுகிறது.தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், குஜராத்தி, பஞ்சாபி, ஒரியா ஆகிய மொழிகளில் இப்படம் வருகிறது. ஐப்பானிய மொழியிலும் டப்பிங் செய்து வெளியீடு கின்றனர்.
கோச்சடையான் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை சவுந்தர்யா ரஜினி மற்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். அதன்படி, வரும் மே 9ம் தேதி உலகம் முழுவதும் 9 மொழிகளில் 4000 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி