சென்னை:-பிரபல ஆபாசப்பட நடிகை சன்னி லியோன் வடகறி படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்துள்ளார். அவர் ஆடும் பாடலுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதால், ஏராளமான டியூன் போட்டு அதிலிருந்து ஒன்றை செலக்ட் பண்ணி பாடலை பதிவு செய்திருக்கிறார்கள்.
இந்த பாடலை பாடியிருப்பவர் ஆண்ட்ரியா.அவர் சாதாரணமாக பாடினாலே இளசுகளை சூடேத்தும் விதமாகத்தான் இருக்கும். ஆனால் இந்த பாடலுக்கு ஆடுவது சன்னி லியோன் என்பதால், வார்த்தைகளை முக்கல் முனகல் சேர்த்து செக்ஸியாக உச்சரித்துள்ளார் ஆண்ட்ரியா.
மேலும், இந்த பாடலை, அனிருத்துடன் இணைந்து ஆண்ட்ரியா பாடியிருக்கிறார் என்பது இன்னும விசேசம். ஏற்கனவே உதட்டு முத்த சர்ச்சையில் சிக்கிய அவர்கள் இருவரும் இந்த பாடலை பாடியிருப்பதால்,இந்த பாடலுக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி