செய்திகள்,திரையுலகம் 1000 துணை நடிகர்களுடன் உருவாகும் தனுஷ் பட க்ளைமாக்ஸ்!…

1000 துணை நடிகர்களுடன் உருவாகும் தனுஷ் பட க்ளைமாக்ஸ்!…

1000 துணை நடிகர்களுடன் உருவாகும் தனுஷ் பட க்ளைமாக்ஸ்!… post thumbnail image
சென்னை:-தனுஷ் நடிக்கும் படம் ‘வேலையில்லா பட்டதாரி’,வேலையில்லா பட்டதாரி படம் தனுஷ் நடிக்கும் 25வது படமாகும். மேலும் , இயக்கம் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ்.

தனுஷே தயாரித்து வரும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கிறார். சமுத்திரகனி, தனுஷின் அப்பாவாக நடிக்கிறார்.தனுஷ் இந்தப்படத்தின் கன்ஸ்ட்ரக்ஷ்ன் நிறுவனத்தில் வேலை பார்ப்பவராக நடித்துள்ளார். அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள வேலையில்லா பட்டதாரி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை சென்னையை அடுத்த புறநகர் பகுதியில் படமாக்கினார் வேல்ராஜ். இதற்காக சுமார் 1000 துணை நடிகர்களை வரவழைத்து, 6 கேமிராமேன்களை கொண்டு படமாக்கி உள்ளார் வேல்ராஜ்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி