இதையடுத்து ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பதட்டம் நிலவிவருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில் மின் தயாரிப்பு கட்டணம் செலுத்துதல் தொடர்பாக ரஷியா, உக்ரைன் இடையே மீண்டும் பிரச்சினை எழுந்துள்ளது.இது தொடர்பாக ரஷிய அதிபர் புதின் கூறியிருப்பதாவது:–
மின் கட்டணம் தொடர்பான பிரச்சினை உள்ளிட்டவற்றை உக்ரைனுடன் பேசி தீர்த்து கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால் உக்ரைனின் போக்கு வேறுவிதமாக இருக்கிறது. அவர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்பாமல் மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டால் நாங்களும் வேறு மாதிரி நடந்துகொள்ள வேண்டியிருக்கும்.இதனால் உக்ரைன் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனது வேண்டுகோளை உக்ரைன் ஏற்றுக்கொள்ளும் என்று நான் நம்புகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி