சென்னை:-செளந்தர்யா அஸ்வின் இயக்கத்தில் ரஜினிகாந்த், தீபிகாபடுகோனே, ஷோபனா, ஜாக்கிஷெராப், சரத்குமார், நாசர், ஆதி உட்பட பலர் நடித்துள்ள படம் ‘கோச்சடையான்’.
மீடியா ஒன் குளோபல் என்டெர்டெய்ன்மென்ட் மற்றும் ஈராஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது.இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பாடல்கள், டிரெய்லர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்த, இப்போது பட வெளியீடு எப்போது என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
படம் வருகிற மே 9ம் தேதி படம் திரைக்கு வர இருக்கிறது. முதன் முறையாக நடிப்புப் பதிவாக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ‘கோச்சடையான்’ பலத்த எதிபார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகப்போகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி