கடந்த சில நாட்களுக்கு முன்பு விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து அவ்வப்போது சிக்னல்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடும் கப்பல்களில் ஒன்றான ஆஸ்திரேலியாவின் ஓசன் ஷீல்டுக்கு கிடைத்தது. இதனையடுத்து கறுப்பு பெட்டியை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கறுப்பு பெட்டியின் பேட்டரி விரைவில் காலாவதியாகி விடலாம் என்பதால் அதற்குள் அதனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் நம்பிக்கையுடன் ஈடுபட்டுள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கறுப்பு பெட்டியிலிருந்து வரும் சிக்னல்களை கொண்டு விமானம் விழுந்த பகுதியினை துல்லியமாக கண்டுபிடிக்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இன்றும் விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து தொடர்ந்து சிக்னல்கள் வருவதால் விமானத்தை கண்டுபிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. “நாங்கள் விமானத்தை அல்லது விமானத்தின் பகுதியினையோ கண்டுபிடித்துவிடுவோம், அதற்து அதிக நாட்கள் ஆகாது நான் இப்போது நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்று விமானத்தை முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் ஆங்குஸ் ஹவுஸ்டன் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி