சென்னை:-போக்கிரி, வில்லு படங்களை இயக்கிய பிரபுதேவா பின்னர் பாலிவுட் படங்களை இயக்க தொடங்கினார். இதையடுத்து சென்னையிலிருந்து தனது குடியிருப்பை காலி செய்துவிட்டு மும்பையில் செட்டிலானார். அவ்வப்போது தனது குடும்பத்தினரை சந்திக்க சென்னை வந்து சென்றார்.
பாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்ததால் கோலிவுட் நட்சத்திரங்களுக்கிடையேயான நட்பில் இடைவெளி ஏற்பட்டது. அதை புதுப்பித்துக்கொள்ள முடிவு செய்தார் பிரபுதேவா.இரண்டு தினங்களுக்கு முன் சென்னை வந்த பிரபுதேவா, தனது கோலிவுட் நண்பர்கள் மற்றும் ஹீரோயின்களுக்கு அழைப்பு விடுத்து இரவு விருந்து கொடுத்தார்.
இதில் டைரக்டர் ஷங்கர், நடிகர் விஜய், சித்தார்த், விஷால், ஜெயம் ரவி, நடிகைகள் மீனா, லட்சுமிராய், சங்கீதா, வரலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆனால் மாஜி காதலி நயன்தாராவுக்கு அழைப்பு அனுப்பாமல் புறக்கணித்தார் பிரபுதேவா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி