செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு சச்சினுக்கு கவுரவம் அளிக்கும் ‘விஸ்டன்’!…

சச்சினுக்கு கவுரவம் அளிக்கும் ‘விஸ்டன்’!…

சச்சினுக்கு கவுரவம் அளிக்கும் ‘விஸ்டன்’!… post thumbnail image
லண்டன்:-கிரிக்கெட் உலகின் ‘பைபிள்’ என போற்றப்படுகிறது விஸ்டன் சர்வதேச இதழ். இதன் 151வது பதிப்பின் அட்டைப்படத்தில் இந்திய ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின் படத்தை வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது. இப்புத்தகம் லண்டனில் வெளியாகிறது.

கடந்த ஆண்டு நவம்பரில் மும்பையில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் சச்சின் பங்கேற்றார். இப்போட்டியுடன் விடைபெற்ற இவர், வான்கடே மைதான ரசிகர்களின் கரகோஷத்தை ஏற்றுக் கொண்டு ‘பேட்டை’ உயர்த்தியவாறு வெளியேறினார். இந்தப்படத்தை தான் விஸ்டன் வெளியிட்டுள்ளது.

இது குறித்து விஸ்டன் இதழ் ஆசிரியர் லாரன்ஸ்பூத் கூறுகையில்,‘‘அதிக எதிர்பார்ப்பு கொண்ட ரசிகர்கள் முன் சுமார் 24 ஆண்டுகள் சச்சின் விளையாடினார். கிரிக்கெட் அரங்கில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இவரது படத்தை வெளியிடுவதில் விஸ்டன் மகிழ்ச்சி கொள்கிறது,’’என்றார்.விஸ்டன் இதழின் அட்டைப்படத்தில் இடம் பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் சச்சின்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி