சென்னை:-வளசரவாக்கத்தில் உள்ள விஸ்வரூபா சாய் மந்திர் கோவிலில் நேற்று இயக்குனர் கௌதம் மேனன் மற்றும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் முன்னிலையில் அஜித்தின் 55வது படத்தின் பூஜை செய்யப்பட்டு முன்னோட்ட காட்சிகள் எடுக்கப்பட்டன.
ஏப்ரல் 11ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் ஆஸ்திரேலிய ஒளிப்பதிவாளர் டேன் மேகர்தர் மற்றும் இந்திய ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர் ஆகிய இருவரில் யார் இந்த படத்தில் ஒளிப்பதிவு செய்வது என்று பேச்சுவார்த்தையில் இருந்தனர்.
தற்போது இது பற்றி டேன் மேகர்தர் தனது டிவிட்டர் பக்கத்தில், அஜித்தின் 55வது படத்தில் ஒளிப்பதிவாளராக வேலை செய்ய இருப்பதாகவும், படப்பிடிப்பை தொடங்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி